Home Featured நாடு ‘த எட்ஜ்’-க்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியுள்ள மற்ற ஊடகங்கள்!

‘த எட்ஜ்’-க்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியுள்ள மற்ற ஊடகங்கள்!

572
0
SHARE
Ad

Edge3கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – 1எம்டிபி விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக, எட்ஜ் குழுமத்தைச் சேர்ந்த ‘த எட்ஜ் வீக்லி’ மற்றும் ‘த எட்ஜ் பினான்சியல் டெய்லி’ ஆகிய இரு பதிப்புகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது உள்துறை அமைச்சு.

Edge2

உள்துறை அமைச்சின் இந்த நடவடிக்கைக்கு மலேசியாவின் மற்ற ஊடகங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ‘த எட்ஜ்’ அலுவலகத்திற்கு முன்பு கூடிய சுமார் 200 பேர் அந்நிறுவனத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.

அந்த 200 பேரில் நாட்டின் முன்னணி ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களும் அடங்குவர்.

Edge1

இந்நிலையில், பத்திரிக்கை சுதந்திர கூட்டமைப்பு (The Coalition for Press Freedom) வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி, 11 மணியளவில், வழக்கறிஞர் மன்றத்தின் தலைமையகத்தில் இருந்து கோலாலம்பூர் செண்ட்ரல் மார்கெட் வரை மாபெரும் பேரணி (808) ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அப்பேரணி, பத்திரிக்கை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், அச்சுப்பதிப்பு மற்றும் வெளியீடு சட்டம் பிரிவு 1984-ஐ இரத்து செய்யக் கோரியும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

Edge

இந்த 808 பேரணியைத் தவிர, ஒவ்வொரு செவ்வாய்கிழமை இரவு 8.30 மணி முதல் 10.30 மணி வரையில் #AtTheEdge என்ற குறிச்சொல்லில் (Tag) நட்பு ஊடகங்களில் எட்ஜ்-க்கு ஆதரவாகப் பிரச்சாரங்களும் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.