Home கலை உலகம் ரஜினி புதுப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்குகிறது!

ரஜினி புதுப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்குகிறது!

743
0
SHARE
Ad

lingaa-rajini-12-12-14-337x270சென்னை, ஆகஸ்ட் 6 – அட்டக்கத்தி, மெட்ராஸ் படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 18-ஆம தேதி மலேசியாவில் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார்.

“ரஜினிக்கு ஜோடி ராதிகா ஆப்தேவா?ச்சீ!” என்றொரு அருவருப்பான எண்ணமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஏனெனில், ஆபாசப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ராதிகா ஆப்தே. அவரது ஆபாசப் புகைப்படங்களும், ஆபாசக் காணொளியும் இணையத்திலும் சமூகவலைதளங்களிலும் வெளியாகிப் பரபரப்பாகப் பகிரப்பட்டது. அதனால்தான் “ரஜினிக்கு ஜோடி ராதிகா ஆப்தேவா? சரிப்படாதே!” என்ற விமர்சனம் எழுந்தது.

#TamilSchoolmychoice

அந்த எண்ணமும் விமர்சனமும் கூட சமீபத்தில் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான ‘அகல்யா’ என்ற குறும்படத்தைப் பார்த்ததும் மறைந்துவிட்டது.

ராதிகாஆப்தேவுக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதாலேயே ரஜினியும் ரஞ்சித்தும் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதில் ரஜினியுடன் பிரகாஷ்ராஜ், அட்டக்கத்தி தினேஷ், மெட்ராஸ் கலையரசன் முதலியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரமே தொடங்கிவிடும் என்று முதலில் கூறப்பட்டது. சில காரணங்களால் படப்பிடிப்பை ஒரு மாதத்திற்கு ரஜினி தள்ளிப் போடச் சொன்னதால், செப்டம்பர் 18-ஆம் தேதி படப்பிடிப்பை வைத்திருக்கிறார்கள்.

மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தத் தேவையான இடங்களையெல்லாம் ஏற்கெனவே இயக்குநர் ரஞ்சித்தும் ஒளிப்பதிவாளரும் நேரடியாக வந்து  பார்த்து முடிவு செய்துவிட்டனர்.

படப்பிடிப்பிற்காகச் செப்டம்பர் 17-ஆம் தேதி சென்னையிலிருந்து மலேசியாவுக்குப் புறப்படுகிறார் ரஜினி.  அங்கு 40 நாட்கள் முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.