Home Featured நாடு இளம் ஓவியர் சோமேஸ்வரனின் மாபெரும் ஓவியக் கண்காட்சி!

இளம் ஓவியர் சோமேஸ்வரனின் மாபெரும் ஓவியக் கண்காட்சி!

614
0
SHARE
Ad

கிள்ளான், ஆகஸ்ட் 15 – கிள்ளானில் ‘உயிர்’ எனும் கருப்பொருளில் நாளை மாபெரும் ஓவியக் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

19 வயதே நிரம்பிய நாட்டின் இளம் ஓவியர் சோமேஸ்வரன் வீரையா வரைந்த கண்கவர் ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

மேலும், இந்தக் கண்காட்சியை தொழிலதிபர் ஓம்ஸ் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கிறார். அவரோடு நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் டாக்டர் சந்திரன் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

10982769_680138468787025_806438764174042827_n

4 வயது முதல் ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வமுள்ளவராகத் திகழ்ந்த சோமேஸ்வரன் வீரையா, முறையான பயிற்சி மற்றும் தீவிரமான ஆர்வம் காரணமாகத் தற்போது 19 வயதில் மிகச் சிறந்த ஓவியக்கலைஞராக உருவாகியுள்ளார்.

முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சோமேஸ்வரனுக்கு ஆதரவும், ஊக்கமும் அளிக்கும் படி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கண்காட்சி நடைபெறும் நாள், இடம்:

நாள்: ஆகஸ்ட் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: திருவள்ளுவர் மண்டபம்,

எண் 146, ஜாலான் கஸ்டம், 42000

பெலாபுஹான், கிள்ளான். (ஜாலான் கஸ்டன் கேடிஎம் எதிரில்)

தொடர்புக்கு: வீரையா – 0196730131

வைஸ்ணவி – 0149336989