Home உலகம் இந்தியப் பிரதமர் மோடி நவம்பரில் சிங்கப்பூர் வருகிறார் – லீ சியான் லூங் அறிவிப்பு!

இந்தியப் பிரதமர் மோடி நவம்பரில் சிங்கப்பூர் வருகிறார் – லீ சியான் லூங் அறிவிப்பு!

549
0
SHARE
Ad

modi-Lee-Hsien-Loong1சிங்கப்பூர், ஆகஸ்ட் 16 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் நவம்பர் மாதத்தில் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வருகிறார். அவரின் வருகையின் மூலம் இரு நாடுகளின் உறவுப் பாலம் மேலும் வலுபெறும் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 69-வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து கூறும் வகையில் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ள லீ சியான் லூங், அந்த கடிதத்தில் நவம்பரில் மோடியின் வருகை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் அந்த கடிதத்தில், “சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது, தனி நாடாக முதன் முதலில் அங்கீகரித்த நாடு இந்தியா தான். தற்போது இரு நாடுகளின் உறவுப் பாலம் நல்ல முறையில் இருந்து வருகிறது. இரு நாடுகளின் உறவு அனைத்து நிலைகளிலும் மேலும் மேலும் வலு பெற வேண்டும் என என் மனம் விரும்புகிறது.”

#TamilSchoolmychoice

“நான் மற்றும் என மனைவி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்த போது எங்களுக்கு அளிக்கப்பட விருந்தோம்பல் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது. வரும் நவம்பர் மாதம் நீங்கள் சிங்கப்பூர் வரும் பொழுது அதனை உங்களுக்கு நாங்கள் திருப்பி செலுத்த காத்திருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.