Home உலகம் லிபியாவில் மத்திய தரைக்கடல் பகுதியில் மீண்டும் படகு விபத்து – 40 அகதிகள் பலி!

லிபியாவில் மத்திய தரைக்கடல் பகுதியில் மீண்டும் படகு விபத்து – 40 அகதிகள் பலி!

745
0
SHARE
Ad

migrants-europeரோம், ஆகஸ்ட் 16 – லிபியாவின் வடக்கே மத்திய தரைக்கடல் பகுதியில் 320 அகதிகளுடன் வந்த கடத்தல் படகு கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த இத்தாலிய கடற்படை கடலில் தத்தளித்த பெரும்பாலானவர்களை மீட்டது. எனினும், 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மத்தியத் தரைக்கடல் பகுதியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாவது ஒன்றும் புதிதல்ல. ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு சண்டையை அடுத்து கள்ளத் தனமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், 600 பயணிகளுடன் வந்த அகதிகள் படகு மத்தியத் தரைக் கடல் பகுதியில் கவிழ்ந்து விழுந்தது. இதில் 200 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.