Home Featured உலகம் லிபியா விமானக் கடத்தல்: கடத்தல்காரர்கள் சரண்! அனைவரும் விடுவிப்பு!

லிபியா விமானக் கடத்தல்: கடத்தல்காரர்கள் சரண்! அனைவரும் விடுவிப்பு!

992
0
SHARE
Ad

afriqiyah-plane-hijacked-malta-disembarkingமால்டா – (மலேசிய நேரம் இரவு 10.50 நிலவரம்) கடத்தப்பட்டு மால்டா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் அஃபிக்ரியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்திலிருந்து அனைத்து பயணிகளும், பணியாளர்களும் சில நிமிடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் சரணடைந்துள்ளனர். அவர்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என மால்டா பிரதமர் ஜோசப் மஸ்காட் தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விமானக் கடத்தல் நாடகம்,  தொடங்கிய சில மணி நேரங்களில் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.