மால்டா – கடத்தப்பட்ட லிபிய விமானத்திலிருந்து இதுவரை குழந்தைகளும், பெண்களுமாக 109 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கடத்தல்காரர்கள் இன்னும் சில விமானப் பணியாளர்களை பிணையாகப் பிடித்து வைத்திருக்கின்றனர்.
கடத்தப்பட்ட விமானம் இதுதான்! தற்போது மால்டா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
லிபியாவின் அஃபிக்ரியா (Afriqiyah) விமான நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம் தற்போது மால்டா தீவு நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளது. இத்தாலிக்கு தென்பகுதியில் மெடிட்டெரேனியன் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு மால்டா. லிபியாவுக்கு வடக்குப் புறம் அமைந்துள்ள நாடு.
நடத்தப்பட்டு வரும் பேச்சு வார்த்தைகளின் பயனாக, இந்தப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மால்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்காட் தனது டுவிட்டர் தளத்தில் பயணிகள் விடுதலை குறித்து உறுதிப் படுத்தியுள்ளார்.