Home Featured தமிழ் நாடு கோபாலபுரம் திரும்பிய கலைஞர்!

கோபாலபுரம் திரும்பிய கலைஞர்!

807
0
SHARE
Ad

karunanithiசென்னை – கடந்த சில நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இன்று வெள்ளிக்கிழமை மாலை தனது கோபாலபுரம் இல்லம் திரும்பினார்.

இன்று அவர் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்புவார் என அவரது மகள் கனிமொழி நேற்று அறிவித்திருந்தார்.

டிசம்பர் 15-ஆம் தேதி முதல் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

#TamilSchoolmychoice

இன்று நல்ல நேரம் பார்த்து மாலை 4.45 மணிக்கு அவர் மருத்துவமனையை விட்டு புறப்பட்டு கோபாலபுரத்திலுள்ள தனது இல்லம் சென்றடைந்தார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவமனைக்கு கலைஞரின் மகன்கள் அழகிரி, ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோரோடு, மகள்கள் செல்வி, கனிமொழி ஆகியோரும் இன்று வந்திருந்தனர்.

கருணாநிதியைக் காண காவேரி மருத்துவமனை வளாகத்திலும், அவரது இல்லம் அமைந்திருக்கும் கோபாலபுரம் பகுதியிலும் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர்.

கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.