Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘பலே வெள்ளையத் தேவா’ – சுமாரான படம், ஒருமுறைப் பார்க்கலாம்!

திரைவிமர்சனம்: ‘பலே வெள்ளையத் தேவா’ – சுமாரான படம், ஒருமுறைப் பார்க்கலாம்!

847
0
SHARE
Ad

bvt1கோலாலம்பூர் – படத்தின் முன்னோட்டம், புகைப்படங்களைப் பார்க்கும் போதே இது என்ன மாதிரிப் படமாக இருக்கும்? யாருக்கான படமாக இருக்கும்? என்பது ஓரளவு கணித்துவிட முடியும்.

பழக்கத்திற்காக எதையும் செய்யத் துணிவது, நண்பனின் காதலை சேர்த்து வைப்பது எனத் தொடர்ச்சியாக ஒரே மாதிரிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த சசிக்குமார், ஒருகட்டத்தில் தனது வழக்கமான பாணியை மாற்றி, ஊருக்கு நல்ல பிள்ளை, பாட்டிகளுக்குப் பிடித்த பேரன் என பெண்களையும், குழந்தைளையும் ஈர்க்கும் கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து வந்தார். தனது நடிப்பில் ஹீரோயிசத்தோடு, கொஞ்சம் காமெடியையும் கலந்துகட்டினார்.

ஆனால் இன்று வெளியாகியிருக்கும் ‘பலே வெள்ளைய தேவா’ முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கிறது. சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன், பாலா சிங் என அனைவருக்குமே படத்தில், காமெடிக்குப் பஞ்சமில்லாது காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

ஆனால் அக்காட்சிகள் எல்லாம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றதா? என்பது சந்தேகமே!

கதை என்ன?

bvtமதுரை அருகே ஒரு கிராமம்.. போஸ்ட் மாஸ்டரான ரோகிணி தனது மகன் சசிகுமாருடன் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகின்றார். ஒரு சம்பவத்தால், அந்த ஊரில் கேபிள் டிவி தொழில் செய்து வரும் வளவனுக்கும், சசிகுமாருக்கும் இடையில் தகராறு ஏற்படுகின்றது.

அதிலிருந்து சசிகுமாரைப் பழிவாங்க பல சதி வேலைகளைச் செய்கிறார் வளவன்.

bvt5இதனிடையே, அதே ஊரில் வளவனின் சித்தப்பா, சித்தியான சங்கிலி முருகன், கோவை சரளா தம்பதிக்கும், சசிகுமாருக்கும் நல்ல நட்புறவு ஏற்படுகின்றது. அதோடு, அந்த ஊரில் கறிக்கடை வைத்திருக்கும் பாலாசிங்கின் மகள் தான்யா மீதும் சசிக்குமாருக்கு காதல் ஏற்படுகின்றது.

சசிகுமாரின் காதல் ஜெயித்ததா? வளவனுக்கும், சசிக்குமாருக்கும் இடையிலான தகராறு என்ன ஆனது? என்பது தான் கிளைமாக்ஸ்.

ரசிக்க

bvt4இது ஒரு ஜாலியான படம். வெட்டு, குத்து, கொலை, வன்மம், ஆபாசம், கற்பழிப்பு என எந்த ஒரு முகம் சுழிப்பும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம்.

எளிமையான கிராமப் பின்னணியுடன் கூடிய காட்சிகளை இப்படத்தில் ரசிக்கலாம். செயற்கைத்தனம் இல்லாமல் சாதாரணமாக கிராமத்தில் ஒரு கறிக்கடையிலோ அல்லது மரத்தடியிலோ மக்கள் எப்படி பேசிக் கொள்வார்களோ?, அங்கு எந்த மாதிரியான உரையாடல்கள் நடக்குமோ? அவற்றை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சோலை பிரகாஷ்.

bvt3கோவை சரளா – சங்கிலி முருகன் கூட்டணியின் நகைச்சுவைக் காட்சிகள் அருமை ..

அதற்கு ஏற்ப ரவிந்திரநாத குருவின் கேமராவும், தர்புகா சிவாவின் பின்னணி இசையும் கைகொடுத்திருக்கிறது.

குறைகள்

முதல் அரைமணி நேரப் படமே ரசிகனை சோர்ந்து விழ வைத்து விடுகின்றது. அந்த அளவிற்கு பார்த்துப் பழகிய ராமராஜன் காலத்து அறிமுகம். இப்போது வரும் குறும்படங்கள் கூட தொடக்கத்திலேயே ரசிகனை ஈர்ப்பதற்குப் பழகி விட்டன.

சில காட்சிகளில் முழுநீளப் படம் தான் பார்க்கிறோமா? அல்லது தொலைக்காட்சி நாடகம் பார்க்கிறோமா?என்ற குழப்பம் ஏற்படுகின்றது.

bvt3எந்த ஒரு திருப்பமோ, சுவாரசியமோ இல்லாமல் உப்பு சப்பின்றி செல்லும் திரைக்கதை அமைப்பு.

இப்படியாக, ஒரு படத்தில் நாம் எதிர்பார்க்கும், சுவாரசியங்களை ஒரு ஓரமாகத் தூக்கி வைத்துவிட்டு, வெறும் காமெடியை மட்டும் நம்பி களமிறங்கியிருக்கிறது இப்படம்.

யாருக்கான படம்?

bvt2விடுமுறை நாளில் குடும்பத்தோடு ஷாப்பிங் போய் விட்டு, பொழுது போக்குவதற்காக இப்படத்தைப் பார்த்துவிட்டு வரலாம்.

மற்றபடி, திரையரங்கில் சென்று தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய அளவிற்கெல்லாம் இல்லை.

சஸ்பென்ஸ், திகில், அதிரடி சண்டைக் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை இப்படி எதையாவது எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமே!

-ஃபீனிக்ஸ்தாசன்