Home Featured கலையுலகம் இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி!

இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி!

608
0
SHARE
Ad

ilayarajaசென்னை, ஆகஸ்ட் 16 – இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கடந்த வெள்ளிக் கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், “இளையராஜாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வாயுப் பிரச்சனை காரணமாக அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர், உடல் நலன் தேறி வருகிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, இளையராஜாவிற்கு இதய நோய் காரணமாக ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.