Home இந்தியா முழுக்க முழுக்க சூரிய ஒளி தான் – கொச்சி விமான நிலையம் உலக சாதனை!

முழுக்க முழுக்க சூரிய ஒளி தான் – கொச்சி விமான நிலையம் உலக சாதனை!

538
0
SHARE
Ad

kochiகொச்சி, ஆகஸ்ட் 16 – உலகின் முதல் சூரிய ஒளி விமான நிலையம் என்ற சிறப்பை கொச்சி அனைத்துலக விமான நிலையம் பெற இருக்கின்றது.

சுமார் 12 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த திட்டத்தை, கேரள முதல்வர் உம்மன் சாண்டி வரும் 18-ம் தேதி துவக்கி வைக்க இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கொச்சி விமான நிலைய நிர்வாக இயக்குனர் வி.ஜெ.குரியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலக அளவில் முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும் முதல் விமான நிலையம் என்ற சிறப்பை கொச்சி அனைத்துலக விமான நிலையம் பெற இருக்கின்றது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு விமான நிலையம் இயங்குவதற்கு 50,000 யூனிட் மின்சாரம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டது. அந்த 50,000 யூனிட்டையும் சூரிய ஒளியின் முலம் பெறுவதற்கு 46,000 பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த திட்டம் 62 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 45 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெறும் ஆறு மாத காலத்தில் நிறைவேற்றி உள்ளதாக குரியன் தெரிவித்துள்ளார்.