Home Featured உலகம் 1எம்டிபி குற்றவியல் விசாரணை: தொடங்கியது சுவிட்சர்லாந்து!

1எம்டிபி குற்றவியல் விசாரணை: தொடங்கியது சுவிட்சர்லாந்து!

1177
0
SHARE
Ad

switzerland_genevaசூரிச் – 1எம்டிபி தொடர்பிலான குற்றவியல் விசாரணை நடவடிக்கையை சுவிட்சர்லாந்து அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“1எம்டிபியின் இரண்டு துணை நிறுவனங்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத (அறியப்படாத – unknown) ஒரு நபர் மீதான குற்றவியல் விசாரணை நடவடிக்கைகள் கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உறுதி செய்கிறது,” என அந்த அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் மின்னஞ்சல் வழி தெரியப்படுத்தி உள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

1MDB.சுவிட்சர்லாந்தின் பணப் பரிவர்த்தனை முறைகேடு விசாரணை அலுவலகத்துடனான (Money Laundering Reporting Office) தகவல் பரிமாற்றத்துக்குப் பின்னர் இந்த விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்தச் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நடவடிக்கை குறித்து சுவிஸ் நாளேடான ‘லே டெம்ப்ஸ்’ முதன் முதலாக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே 1எம்டிபியுடன் ஏதாவது தொழில் ரீதியிலான நடவடிக்கைகளில் சுவிஸ் வங்கிகள் ஈடுபட்டனவா? என்றும் அந்நாட்டின் நிதி சீர் அமைப்பு (Swiss financial regulator) விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.