Home உலகம் பாங்காக் குண்டு வெடிப்பு: தீவிரவாதிகள் தப்பி இருக்கலாம் எனத் தகவல்!

பாங்காக் குண்டு வெடிப்பு: தீவிரவாதிகள் தப்பி இருக்கலாம் எனத் தகவல்!

682
0
SHARE
Ad

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????பாங்காக் – பாங்காக் குண்டு வெடிப்பிற்கு காரணமான தீவிரவாதிகள், நாட்டை விட்டு தப்பி இருக்கலாம் என தாய்லாந்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ராவத் தவார்ன்சிரி கூறுகையில், “தீவிரவாதிகள் தப்பித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்கள் இங்கு அதிக நேரம் இருந்திருக்க முடியாது. எனினும், நாங்கள் எங்களது முயற்சிகளை கைவிடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற கருத்தினை தாய்லாந்து காவல்துறையின் தலைவரும் கூறியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் பக்கம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால் அவர்கள் தப்பித்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதல் சம்பவத்தில், மலேசியர்கள் உட்பட 20 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.