இந்த விசாரணை முடிந்துவிட்டதாக ஆணையமோ அல்லது அதன் தலைவர் டான்ஸ்ரீ அபுகாசிமோ எத்தகைய அறிவிப்பும் வெளியிடவில்லை என ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
“குறிப்பிட்ட அந்த 2.6 பில்லியன் தொகை மத்திய கிழக்கு பகுதியைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரிடமிருந்தே வந்துள்ளது. அது 1எம்டிபி நிறுவனத்திலிருந்து வரவில்லை என கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 5ஆம் தேதிகளில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த தொகை குறித்தும், 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி.இண்டர்நேஷனல் குறித்தும் விசாரணைகள் நீடித்து வருகிறது” என்று ஊழல் தடுப்பு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.