Home Featured நாடு கைதான மாணவர்களை 3 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கைதான மாணவர்களை 3 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

516
0
SHARE
Ad

Fahmi-Zainolகோலாலம்பூர்- பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்திய 17 மாணவர்களும் 3 நாட்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர்.

கைதான அனைவரும் செவ்வாய்க்கிழமை இரவு ஜிஞ்ஜாங் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 17 பேர் கைதானதை செந்தூல் ஓசிபிடி உதவி ஆணையர் ஆர்.முத்துசாமி உறுதி செய்தார்.

“17 பேரையும் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கக் கூடாது என எங்களது வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். எனினும் அதை ஏற்க மறுத்த நீதிபதி 3 நாள் போலீஸ் காவலுக்கு உத்தரவிட்டார். எனவே அனைவரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என கருதுகிறோம்,” என்று மலேசிய வழக்கறிஞர் மன்ற (பார்கவுன்சில்) தலைவர் ஸ்டீவன் திரு ஜிஞ்ஜாங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

புதன்கிழமையன்று திருத்தப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர், குற்றவியல் சட்டத்தின் 124பி என்ற பிரிவை காவல்துறை தவறாகப் பயன்படுத்தி இருப்பதாகக் கூறினார்.

“வன்முறை அல்லது அரசியல் சானசத்திற்கு எதிரான முறையில் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி நடந்ததற்கான ஆதாரங்களை காவல்துறை காண்பிக்க வேண்டும். ஆனால் வன்முறை நிகழ்ந்ததாக அவர்களால் எத்தகைய ஆதாரத்தையும் காண்பிக்க இயலவில்லை,” என்றார் ஸ்டீவன்.

இதற்கிடையே, கைதானவர்கள் விடுவிக்கப்படும் வரை ஜிஞ்ஜாங் காவல் நிலையம் அருகே மாணவர்கள் திரண்டு நிற்பர் என்று #LangkahSiswa ஒருங்கிணைப்பாளர் முகமட் லக்மான் நுல்ஹாகிம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், 4 பேர் முன்னாள் மாணவர்கள் என்றும் அவர் கூறினார்.