Home கலை உலகம் விஜயகாந்தைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் விஷால்!

விஜயகாந்தைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் விஷால்!

574
0
SHARE
Ad

vishal-vijayakanth-600-jpgசென்னை – நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால், முதற்கட்டமாக முன்னணி நடிகர்களை எல்லாம் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர் விஷால் மற்றும் சரத்குமார் அணியினர்.

விஷால் சென்ற வாரம் தனது அணியினருடன் சென்று ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் சந்தித்து ஆதரவு கோரினார்.

அடுத்த நாளே சரத்குமாரும் சென்று ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்தை விஷால் அணியினர் அவருடைய பிறந்த நாளன்று சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு நீண்ட நேரம் நீடித்தது.

அப்போது நடிகர் சங்கத் தேர்தல் சம்பந்தமாக விஜயகாந்த் அவர்களிடம் நிறைய விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

நடிகர் சங்கம் கடனில் தத்தளித்த போது நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதைக் கடனிலிருந்து மீட்டெடுத்தவர் விஜயகாந்த் என்பதால், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முன்னாள் தலைவர் என்ற முறையில் அவரின் ஆதரவை முக்கியமாக 2 அணியினரும் எண்ணுகின்றனர்.ஆனால் இதில் விஷால் அணி முந்திக் கொண்டுள்ளது.

கேப்டனிற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லவே நேரில் அவரைச் சந்தித்துப் பேசினோம் என்று விஷால் அணியினர் கூறினாலும், அதிலுள்ள உள்குத்து யாருக்கும் தெரியாமலில்லை.

அடுத்ததாக விஷால் அணியினர் நடிகர் விஜய் மற்றும் அஜீத்தைச் சந்திக்கவிருக்கின்றனர். முன்னணி  நடிகர்கள் அனைவரையும் சந்தித்த பிறகு மற்ற அனைத்து நடிகர்களையும் சந்தித்து விஷால் அணியினர் ஆதரவு திரட்ட இருப்பதாக, விஷாலிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.