Home Featured நாடு “பெர்சே பேரணியில் பங்கேற்பதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்” – டத்தோ முருகையா வலியுறுத்து

“பெர்சே பேரணியில் பங்கேற்பதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்” – டத்தோ முருகையா வலியுறுத்து

963
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள பெர்சே பேரணியில் பங்கேற்பதை இந்தியர்கள் தவிர்ப்பது நல்லது என முன்னாள் துணை அமைச்சர் டத்தோ முருகையா (படம்) கேட்டுக் கொண்டுள்ளார்.

Murugiah Dato 600 x 400இந்திய சமுதாயத்திற்கு என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் செய்துள்ள நன்மைகளை, செயல்படுத்தி உள்ள திட்டங்களை இத்தருணத்தில் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“வேறு எந்தப் பிரதமரும் செய்ததை விட இந்திய சமுதாயத்திற்கு ஏராளமான நன்மைகளை பிரதமர் நஜிப் செய்துள்ளார். இந்திய சமுதாயத்திற்கு என சிறப்புத் திட்டங்களை அறிவித்தவர் அவர். தமிழ்ப் பள்ளிகளின் மீது அக்கறை கொண்டவர். புதிய தமிழ்ப் பள்ளிகள் துவங்க அனுமதி அளித்தவர். பத்து மலை திருத்தலத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு மற்ற பிரதமர்கள் அதிகம் வந்ததில்லை. ஆனால் பிரதமர் நஜிப் மட்டுமே பத்து மலை நிகழ்வுக்கு எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து வருகிறார். மலேசியாவில் இனங்களுக்கிடையே வேறுபாடு பார்க்கக் கூடாது எனும் உயர்ந்த கருத்தை வார்த்தைகளால் சொன்னதோடு மட்டுமல்லாமல், செயல்பாட்டிலும் நடைமுறைப் படுத்தியவர் பிரதமர் நஜிப். அது மட்டுமல்லாது அந்த நிகழ்வில் இந்தியர்களின் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார் என்பதையும் நாம் மறந்துவிடல் ஆகாது” என்றும் முருகையா வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

Bersih 4-Logoஇந்திய சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடைபெறும் பெர்சே பேரணியில் இந்தியர்கள் பங்கேற்பது முறையாக இருக்காது என்பதால், இந்தப் பேரணியில் பங்கேற்பதை இந்தியர்கள் அறவே தவிர்க்க வேண்டும் என முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.

“நமக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை அரசாங்கத்திற்கு உரிய வகையில் தெரியப்படுத்த வேண்டும். இந்தியர்களை அரசாங்கத்திலும், அரசு அமைப்புகளிலும் பிரதிநிதிக்கக் கூடியவர்கள் மூலம் அரசாங்க தலைமைக்கு நமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். அதுவே நியாயம்,” என டத்தோ முருகையா மேலும் தெரிவித்துள்ளார்.

மாறாக பேரணியில் பங்கேற்பதும், அரசுக்கு எதிராக முழக்கமிடுவதும் சரியான அணுகுமுறையாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்திய சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டுள்ள பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம், அச்சமுதாயத்திற்கென ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள அரசுக்கு கைகொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.