Home இந்தியா மீண்டும் மருத்துவமனையில் சோ: நேரில் நலம் விசாரித்தார் ஜெயலலிதா!

மீண்டும் மருத்துவமனையில் சோ: நேரில் நலம் விசாரித்தார் ஜெயலலிதா!

653
0
SHARE
Ad

27-1440667870-cho-ramaswamy-jayalalitha--சென்னை – கடந்த சில மாதங்களாக  உடல் நலம் பாதிக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துக்ளக் ஆசிரியர் சோவை, முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

80 வயதாகும் சோ, மூச்சுத் திணறல் காரணமாகச் சில நாடகளுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுப் பின்பு ஓரளவு உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்தார்.

சில வாரத்திற்கு முன் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டுப் பின்பு சோவையும் சந்தித்து நலம் விசாரித்து விட்டுச் சென்றார்.

#TamilSchoolmychoice

நீண்ட நாள் நண்பர் மோடி தன்னைத் தேடி வந்து சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தார் சோ.

இந்நிலையில் சோவின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

சற்று நேரம் மருத்துவமனையில் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டார் ஜெயலலிதா.