Home Featured வணிகம் ரிங்கிட் வீழ்ச்சி சிங்கப்பூரையும் பாதிக்கும் – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விளக்கம்!

ரிங்கிட் வீழ்ச்சி சிங்கப்பூரையும் பாதிக்கும் – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விளக்கம்!

830
0
SHARE
Ad

singaporeசிங்கப்பூர் – “மலேசியப் பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டு இருக்கும் தொய்வும், ரிங்கிட் வீழ்ச்சியும், சிங்கப்பூருக்கு சாதகமானதாக இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம்” என்று அந்நாட்டவர்களுக்கு, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கே சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூட்டம் ஒன்றில் கூறியுள்ளதாவது:-

“சிங்கப்பூர் டாலருக்கு நிகரான மலேசிய நாணய மதிப்பு 3 ரிங்கிட்டாக சரிந்து இருப்பது நமக்கு சாதகமான அம்சம் என சிங்கப்பூர் பிரஜைகள், நினைக்கலாம். இந்த சரிவின் மூலம் அங்கு சென்று தேவையான பொருட்களை எளிதாக கொள்முதல் செய்து கொள்ள முடியும் என்றும் தோன்றலாம். ஆனால் எதார்த்தம் என்ன வென்றால், ரிங்கிட் வீழ்ச்சி இங்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சிங்கப்பூரின் பொருளாதாரம், மலேசியாவுடன் இணைந்து தான் இருக்கிறது.”

#TamilSchoolmychoice

“சிங்கப்பூர், மலேசியாவில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. அங்கு ஏதாவது பதிப்பு நேர்ந்தால், அது இங்கும் எதிரொலிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.