இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் விமானப்படை, கப்பற்படை, இராணுவம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த 5 ஹெலிகாப்டர்களும், விமானப்படையைச் சேர்ந்த இரண்டு போர் விமானங்களும் டத்தாரான் மெர்டேக்காவின் மேல் தாழ்வான உயரத்தில் பறந்துள்ளன.
பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் யூசோப் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது போர் விமானங்களில் ஒன்று மிகத் தாழ்வான உயரத்தில் பறந்துள்ளது.
அந்தச் சத்தத்தில் அவர் சில நிமிடங்கள் தனது பேச்சை நிறுத்த வேண்டி வந்ததாக கூறப்படுகின்றது.
படம்: Malaysiakini
Comments