Home Featured உலகம் பாங்காக் குண்டுவெடிப்பு: சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்!

பாங்காக் குண்டுவெடிப்பு: சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்!

831
0
SHARE
Ad

PAY-Adem-Karadag (2)பாங்காக் – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் பலியாவதற்கு காரணமான பாங்காக் குண்டுவெடிப்பில், சதிகாரன் என சந்தேகிக்கப்படும் நபரை பாங்காக் காவல்துறை நேற்று கைது செய்துள்ளது. புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்த அவன், வெடிகுண்டுகள் செய்வதற்குத் தேவையான கருவிகள் மற்றும்  பல போலி கடவுச்சீட்டுகள் (Passports) வைத்திருந்ததாக தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தாய்லாந்து காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள அவனுக்கு குண்டுவெடிப்பில்  தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் முழு தகவல்கள் வெளியாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.