இம்மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு இரண்டு லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் தொழில் முதலீடு கிடைத்துள்ளதாகவும், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தார்..
மேலும், அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாடு மீண்டும் 2017–ஆம் ஆண்டு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இம்மாநாட்டின் நிறைவில் முதலீட்டாளர்கள் பலரும் பேசினர்.
இந்தியஅமெரிக்க வர்த்தக கவுன்சிலின் துணைத்தலைவர் டயானா பாரல் பேசும்போதுகூறியதாவது: “மாநாடு நடைபெற்ற 48 மணி நேரமும் முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகப் பலன் கிடைத்தது.
மேலும், தமிழகத்தின் விருந்தோம்பல் மிகுந்த மனநிறைவை அளித்தது. முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன்” என்று அவர் மகிழ்ச்சியோடு கூறினார்.