அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் அந்த இணையதளத்தில் இன்று பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்ட சில தகவல்கள் வெளியிடப்பட்டன.
“இக்கொலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவரும் பிரதமரின் பாதுகாவலர்கள். அனைத்துலக அளவில் இந்த குற்றச்சாட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதனால் அடிப்படை ஆதாரமற்ற பல கருத்துகள் கூறப்படுகின்றன”
“அவர்கள் தேசிய காவல்படையின் உறுப்பினர்கள். அவர்கள் அரசாங்க அதிகாரிகளுக்கும், மலேசியாவிற்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கும் சுழற்சி முறையில் பாதுகாப்பிற்கு அமர்த்தப்படுவார்கள். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்படும் வரை அவர்கள் இருவரின் நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்குத் தெரியாது” என்று பிரதமர் அலுவலகம் அல் ஜசீரா இணையதளத்திற்கு அளித்த தகவலில் குறிப்பிட்டுள்ளது.