Home Featured கலையுலகம் கமலஹாசனும் விளம்பரப் படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார்!

கமலஹாசனும் விளம்பரப் படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார்!

583
0
SHARE
Ad

Kamalhassanசென்னை – சினிமாவில் உச்ச நிலையை அடைந்துவிட்டால், சினிமா நடிகர்களுக்கு வருவாயைக் கொட்டிக் கொடுக்கும் துறைகளுள் முக்கியமானவை விளம்பரங்கள்.

பாலிவுட்டின் அமிதாப் பச்சன், தமிழில் விஜய், சூர்யா என பல நட்சத்திரங்கள் விளம்பரப் படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்க, ஒரு சில நடிகர்கள் மட்டும் தங்களின் புகழைப் பயன்படுத்தி விளம்பரப் படங்களில் நடிக்கக் கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் ஆகியோர்.

அவர்களில் இப்போது கமலஹாசனும் தனது முடிவை மாற்றிக் கொண்டு விளம்பரப் படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். அண்மைய சில நாட்களாக தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் ‘போத்தீஸ்’ சேலைகள் மற்றும் ஆடைகளுக்கான கடை விளம்பரத்தில் கமலஹாசன் தோன்றுகின்றார்.

#TamilSchoolmychoice

“மக்களின் அபிமானம் ஒருவர் மீது எப்போது உருவாகும்” எனக் கமல் வசனம் பேசுவது போல் தொடங்கும் விளம்பரத்தில் கம்பீரமானத் தோற்றத்துடன் கமல் தோன்றும் விளம்பரத்தின் மூலம், பிரபலமான போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராகவும் கமல் மாறியிருக்கின்றார்.

இரண்டு மூன்று கோணங்களில் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரப் படம் மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றது.

கமல் இதற்கு முன் இது போன்ற விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், அண்மைய ஆண்டுகளில் கமல் தோன்றி நடித்திருக்கும் ஒரே விளம்பரப் படம் என்பதால், கோடிக்கணக்கான ரூபாய் இதற்காக கமலுக்கு வழங்கப்பட்டிருக்கும் என சென்னை சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

கமல் நடித்த போத்தீஸ் விளம்பரத்தை யூ டியூப் இணையத்தளத்தில் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் காணலாம்: