சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுக்களின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், போட்டியில் இருந்து விலக நினைப்பவர்களுக்கு இன்று முழுவதும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து விலக நினைக்கும் நடிகர்கள் இன்று 7-ம் தேதிக்குள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற வேண்டும்.
இதனைத் தொடர்ந்து இன்று மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இறுதி நேரத்தில் சுமூகமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா? அல்லது முழுமூச்சாக நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.
இன்றைய நிலவரப்படி, வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர் விவரம் வெளியிடப் பட்டுள்ளது.
சரத்குமார் அணி
தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர் பதவிகளுக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்எஸ்ஆர் கண்ணன் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்களாக அசோக், டி.பி.கஜேந்திரன், இசையரசன், ஜெயமணி, கே.என்.காளை, எஸ்.பி.கலை மணி, எம்எஸ்கே குமரன், முகமது மஸ்தான், மோகன் ராமன், நளினி, நிரோஷா, பார்வதி, பழனிச்சாமி, ராஜன், எம்.ராஜேந்திரன், ஆர்.ராஜேந்திரன், ஆர்.ரவிக்குமார், ராம்கி, சாந்தகுமார், ‘பசி’ சத்யா, செல்வராஜ், பவன், ஜாக்குவார் தங்கம், வீரமணி போட்டியிடுகின்றனர்.
நாசர் அணி
தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிகளுக்கு பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு கார்த்தி போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்களாக ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, ராஜேஷ், கோவை சரளா, பூச்சி முருகன், சிவகாமி, எம்.பி.விஸ்வநாதன், காமராஜ், காளிமுத்து, பசுபதி, நந்தா, ஸ்ரீமன், ரமணா, உதயா, சங்கீதா, விக்னேஷ், தளபதி தினேஷ், சோனியா போஸ் வெங்கட், பிரசன்னா, ரத்னப்பா, ஜெரால்டு மில்டன், பிரேம்குமார், பாலதண்டபாணி, அயூப் ஆகிய 24 பேர் போட்டியிடுகின்றனர்.