இந்திய நேரப்படி, பிற்பகல் 2.00 மணியளவில் (மலேசிய நேரம் பிற்பகல் 4.30 மணி) மனோரமாவில் இல்லம் வந்தடைந்தார் ஜெயலலிதா.
அண்மையக் காலங்களில் வெளிப்புற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வந்திருக்கும் ஜெயலலிதா மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்த நேரடியாக அவரது இல்லத்திற்கு வந்தது, மனோரமா மீது அவர் கொண்டிருந்த அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.
மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, பத்திரிக்கையாளர்களிடம் உரையாடிய ஜெயலலிதா, அவருடன் ஒன்றாக நடித்ததை நினைவுகூர்ந்தார். பல முறை அவரது இல்லத்திற்கு சென்றிருப்பதாகவும், அப்போதெல்லாம், “சாப்பிடுறியா அம்மு? எனக் கேட்டு விட்டு தன் கையாலேயே சமைத்து எனக்கு பரிமாறுவார். அவருடனான எனது நட்பு மறக்க முடியாதது” என சோகத்துடன் கூறினார்.