ஆம்ஸ்டெர்டாம் – எம்எச்17 பேரிடர் தொடர்பில் நீண்ட நாட்களாகக் காத்திருந்த விசாரணை அறிக்கையை டச்சு பாதுகாப்பு வாரியம் இன்று வெளியிடவுள்ளது.
கிழக்கு உக்ரைனில் மலேசியப் பயணிகள் விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதற்குக் காரணம் ஒரு ரஷ்ய தயாரிப்பு ஏவுகணை தான் என்று டச்சு பாதுகாப்பு வாரியம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
என்றாலும், அதை வீழ்த்தியவர்கள் யார்? என்பது இன்று அறிவிக்கப்படமாட்டாது என்றும் கூறப்படுகின்றது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் கிழக்கு உக்ரைன் அருகே பறந்த மலேசியப் பயணிகள் விமானமான எம்எச்17, ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்தப் பேரிடரில் அவ்விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.