கோலாலம்பூர் – நம் கணினியில் காணொளிகளைப் பார்க்கப் பயன்படும் மென்பொருளான ‘விஎல்சி ப்ளேயரில்’ (VLC Player) நாம் அறிந்திராத பல்வேறு நுணுக்கங்களும், பயன்பாடுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான் ‘பைல் கன்வெர்ட்’ (File Convert)
நாம் விரும்புகின்ற காணொளியை MP4, MP3 அல்லது அண்டிரொய்டு எச்டி என எத்தகைய ஃபார்மட்டுக்கும் (Format) மாற்றிக் கொள்ளும் வசதி விஎல்சி ப்ளேயரிலேயே உள்ளது. இதற்காக பிரத்யேக ‘வீடியோ கன்வெர்ட்டர்களை’ (Video Converter) பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
உதாரணமாக நீங்கள் கணினியில் காணுகின்ற காணொளி ஒன்றை, உங்கள் அண்டிரொய்டு திறன்பேசியில் எச்டி வடிவில் காண வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதனை மிக எளிதாக விஎல்சியிலேயே செய்ய முடியும்.
விஎல்சி ப்ளேயரில் இருக்கும் Media -> Convert/Save பட்டி கிளிக் செய்து தோன்றும் சாளரத்தில், ஃபைல் (file) பட்டியின் கீழ் தேவையான காணொளியை ‘ஆட்’ (Add) பொத்தானை கிளிக் செய்து சேர்க்க வேண்டும். அதன் பிறகு வேலை எளிது தான்.
Convert/Save பொத்தானை கிளிக் செய்தால் புதிய சாளரம் ஒன்று தோன்றும். அதில் காணொளியை எந்த ஃபார்மெட்டில் மாற்ற வேண்டுமோ அதனை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
இதே விஎல்சி ப்ளேயரில், நாம் பார்க்கும் காணொளியின் தேவையான பகுதிகளை மட்டும் ‘ரெக்கார்ட்’ (Record) செய்து கொள்ள முடியும்.
அதற்கு View->Advanced Control என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது காணொளியை ப்ளே செய்யும் பொத்தானிற்கு மேல் ‘ரெக்கார்ட்’ (Record) செய்யும் சிவப்பு நிற பொத்தான் தோன்றும். அந்த பொத்தானை அழுத்தி விட்டு காணொளியின் எந்த இடத்தில் இருந்து நமக்கு ரெகார்ட் செய்ய வேண்டும், அங்கு கிளிக் செய்ய வேண்டும்.
பதிவு செய்ததை நிறுத்த வேண்டிய இடத்தில் மீண்டும் ரெகார்ட் பொத்தானை அழுத்த வேண்டும். இப்படி நாம் பதிவு செய்து இருக்கும் ஃபைல், நமது கணினியில் இருக்கும் Libraries->videos என்ற இடத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்.
– சுரேஷ்