Home Featured தமிழ் நாடு கும்பி எரியுது; குடல் கருகுது; கொடநாடு ஒரு கேடா? – கருணாநிதி கேள்வி!

கும்பி எரியுது; குடல் கருகுது; கொடநாடு ஒரு கேடா? – கருணாநிதி கேள்வி!

635
0
SHARE
Ad

KARUNANIDHI_891185fசென்னை – தமிழ்நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக தலைவர் மு.கருணாநிதி, தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடே செழிக்கும்; பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடும்; விலைவாசி தரை மட்டத்திற்கு இறங்கி விடும் என்றெல்லாம் வாய்ஜாலம் காட்டி, மக்களை ஏமாற்றி, பதவிக்கு வந்தவர்கள் ஆட்சியில், தற்போது விலைவாசி இறக்கை கட்டிக் கொண்டு விண்ணைநோக்கி வேகமாகப் பறக்கின்றது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உள்ள விலையையும், தற்போது அதே பொருள்களின் விலையையும் சுட்டிக் காட்டவேண்டுமேயானால்,மிளகாய் வற்றல் வகைகளின் விலையும்கிலோவுக்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.”

#TamilSchoolmychoice

“குறிப்பாக, பருப்பு வகைகளின் விலை உயர்வு எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று நான் ஏற்கனவே விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அதற்குப் பிறகும் அரசின் சார்பில் எவ்வித முயற்சியும் எடுக்கப்படாததால், கழக ஆட்சியில் துவரம் பருப்பு என்ன விலை விற்றதோ, அதைப் போலத் தற்போது நான்கு மடங்காக விலை உயர்ந்துள்ளது.”

“வரலாறு காணாத இந்த விலை உயர்வின் காரணமாக ஏழை எளிய குடும்பங்கள் உணவில் குழம்பு அல்லது சாம்பார் என்பதையே மறந்து வருகின்றன. இதற்குப் பிறகு தான் தமிழக அரசு தேர்தல் வருவதாலோ என்னவோ அரைத் தூக்கம் கலைந்து 1-11-2015 முதல் அங்காடிகளில் குறைந்த விலைக்கு பருப்பு விற்பனை துவங்கப்படும் என்று தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதைப் போல, அறிவித்திருக்கின்றது.”

“அரசின் இந்த அறிவிப்பு பற்றி பருப்பு மொத்த வியாபாரிகள் கூறும்போது, தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்துள்ளது, 500 மெட்ரிக் டன்னை அரவைக்கு அனுப்பும் போது 15 சதவிகிதம் வரை கழிவு ஏற்பட வாய்ப்புள்ளது, அதாவது கழிவு போக 425 மெட்ரிக் டன் மட்டுமே பருப்பு கிடைக்கும். இந்தப் பருப்பும் 9 நாட்களுக்கு மட்டும் தான் வரும். எனவே அரசின் இந்த நடவடிக்கை வெறும் கண் துடைப்பு நாடகம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.” என்று கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.