Home Featured நாடு சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு!

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு!

633
0
SHARE
Ad

sivarasa-dec14கோலாலம்பூர் – கடந்த மார்ச் 7-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற கித்தா லாவான் பேரணியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா மீது தேசநிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஓரினப்புணர்ச்சி வழக்கில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பில் நீதித்துறையை கடுமையாக விமர்சித்துப் பேசியதாக சிவராசா மீது தேச நிந்தனைச் சட்டம் 1948,  பிரிவு 4 (1)-ன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.