Home நாடு யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் வாய்ப்பு

யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் வாய்ப்பு

1126
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதி சிறப்பான முறையில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் (MRSM) இடவாய்ப்பு வழங்கப்படுகிறது என அறிவித்திருக்கும் புறநகர் மேம்பாட்டு துணையமைச்சர் ஆர்.சிவராசா (படம்), சிறந்த வசதிகள் கொண்ட இந்தக் கல்லூரிகளில் பயில்வதற்கு பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.

தனது அலுவலகம் இந்த விவகாரம் குறித்த தரவுகளைத் திரட்டி வருவதாகக் குறிப்பிட்ட சிவராசா, பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு சுமார் 700 இடங்களே இருக்கும் நிலையில், அதற்காக ஏறத்தாழ 3000 பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் மாரா இளநிலைக் கல்லூரிகளில் பயில விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் மாரா கல்லூரிகளில் பயில விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் இணையம் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான சிவராசா கூறினார்.

#TamilSchoolmychoice

மாரா கல்லூரிகளில் பயில விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் பிரச்சனையை முன்னெடுத்துச் செல்ல, அவர்கள் இணையம் வாயிலாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் சிவராசா கேட்டுக் கொண்டார்.