Home நாடு சிவராசா மீதான தேசநிந்தனைக் குற்றச்சாட்டு மீட்டுக் கொள்ளப்பட்டது

சிவராசா மீதான தேசநிந்தனைக் குற்றச்சாட்டு மீட்டுக் கொள்ளப்பட்டது

1148
0
SHARE
Ad

கோலாலம்பூர் -கிராமப்புற மேம்பாட்டு துணையமைச்சர் ஆர்.சிவராசா மற்றும் சுனார் எனப் பரவலாக அழைக்கப்படும் கேலிச்சித்திர (கார்ட்டூன்) ஓவியர் சுல்கிப்ளி எஸ்.எம் அன்வார் உல்ஹாக், வழக்கறிஞர் என்.சுரேந்திரன் ஆகியோர் மீதான தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகளை இன்று அரசாங்கத் தரப்பு மீட்டுக் கொண்டதை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

கோலாலம்பூரிலுள்ள இரண்டு அமர்வு நீதிமன்றங்களில்  (செஷன்ஸ்) இந்த வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டன.

கடந்த 7 மார்ச் 2015-ஆம் தேதி கேல்சிசி வளாகத்தில் நடந்த ‘கித்தா லாவான்’ பேரணியில் தேச நிந்தனைக்குரிய உரையாற்றிய காரணத்திற்காக 62 வயதான சிவராசா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டிருந்தது. சிவராசா சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

கேலிச்சித்திர ஓவியர் சுனார்

#TamilSchoolmychoice

கடந்த நஜிப் ஆட்சிக் காலத்தில் தனது கேலிச்சித்திர ஓவியங்களால் அரசியல் நடப்புகளை எடுத்துக் காட்டி பரபரப்பு ஏற்படுத்திய சுனார் மீது காவல் துறையினர் பல முறை கைது நடவடிக்கை மேற்கொண்டனர். 56 வயதான அவர் கடந்த 10 பிப்ரவரி 2015-இல் டுவிட்டரில் பதிவிட்ட பதிவுகளுக்காக அவர் மீது 9 தேசநிந்தனைக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

52 வயதான சுரேந்திரன் கடந்த 18 ஏப்ரல் 2014-ஆம் தேதி மலேசியாகினி இணைய ஊடகத்தில் எழுதிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு குறித்த கட்டுரை தொடர்பில் அவர் மீதும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.