Home உலகம் அன்வாரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்

அன்வாரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்

1332
0
SHARE
Ad

இஸ்தான்புல் – துருக்கி, இஸ்தான்புல் நகரில் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

கடந்த சனிக்கிழமை ஜூலை 28-ஆம் தேதி இந்த சந்திப்பு நடந்தது.

கிட் சியாங் தன்னை வந்து சந்தித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அன்வார் “தனது இடைவிடாத அலுவல்களுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி என்னை நேரில் சந்திக்க துருக்கி வந்த எனது நீண்டகால நண்பர் லிம் கிட் சியாங்குக்கு நன்றி கூறுகிறேன். பல்வேறு நடப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்து விவாதித்தோம். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் அவரது உற்சாக உணர்வு கண்டு நான் எப்போதும் வியந்திருக்கிறேன். அவர் நீண்ட ஆயுளோடு சிறப்பாக சேவையாற்ற வாழ்த்து கூறுவதோடு, பாதுகாப்பாக நாடு திரும்பவும் வாழ்த்துகிறேன்” என அன்வார் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.