சேலம் – ‘நமக்கு நாமே’-வின் மூன்றாம் கட்ட பயணத்தை சேலத்தில் துவக்கி உள்ள ஸ்டாலின், நேற்று அங்கு பொது மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் ஊழல் அற்ற ஆட்சியை கொண்டுவாருங்கள் அதுபோதும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதில் அளித்து ஸ்டாலின் பேசியதாவது:-
“திமுக ஆட்சியின் போது, சிலர் தவறுகளில் ஈடுபட்டனர். அதற்கு, நானும் துணை போயிருக்கலாம். அந்த தவறுகள் இனி இருக்காது. ‘கரப்ஷன்’, ‘கலெக்ஷன்’, ‘கமிஷன்’ இல்லாத ஆட்சியை கொடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடந்த பொதுக் கூட்டங்களிலும் அவர் இதே யுக்தியை கையாண்டார். எனினும், இது எந்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்கும் என்பதை தேர்தல் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.