Home இந்தியா கடந்த ஆட்சியில் தவறு நடந்தது..நானும் துணை போயிருக்கலாம் – ஸ்டாலின் ஒப்புதல்!

கடந்த ஆட்சியில் தவறு நடந்தது..நானும் துணை போயிருக்கலாம் – ஸ்டாலின் ஒப்புதல்!

671
0
SHARE
Ad

stalin1_350__சேலம் – ‘நமக்கு நாமே’-வின் மூன்றாம் கட்ட பயணத்தை சேலத்தில் துவக்கி உள்ள ஸ்டாலின், நேற்று அங்கு பொது மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் ஊழல் அற்ற ஆட்சியை கொண்டுவாருங்கள் அதுபோதும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பதில் அளித்து ஸ்டாலின் பேசியதாவது:-

“திமுக ஆட்சியின் போது, சிலர் தவறுகளில் ஈடுபட்டனர். அதற்கு, நானும் துணை போயிருக்கலாம். அந்த தவறுகள் இனி இருக்காது. ‘கரப்ஷன்’, ‘கலெக்ஷன்’, ‘கமிஷன்’ இல்லாத ஆட்சியை கொடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே நடந்த பொதுக் கூட்டங்களிலும் அவர்  இதே யுக்தியை கையாண்டார். எனினும், இது எந்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்கும் என்பதை தேர்தல் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.