Home Featured உலகம் இன்று இரவு பூமியைக் கடக்கிறது ‘ஸ்பூக்கி’ விண்கல்!

இன்று இரவு பூமியைக் கடக்கிறது ‘ஸ்பூக்கி’ விண்கல்!

601
0
SHARE
Ad

asteroid-nearகோலாலம்பூர் – 290 மீட்டர் மற்றும் 650 மீட்டர் அளவிலான விண்கல் ஒன்று இன்று இரவு பூமிக்கு மிக அருகாமையில் கடந்த செல்கிறது.

இது குறித்து தேசிய விண்வெளி ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாசா கண்டறிந்த ‘ஸ்பூக்கி’ என்றழைக்கப்படும் விண்கல் 2015 TB145, நொடிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில், துப்பாக்கிக் குண்டை விட 29 முறை விரைவாக பூமிக்கு மிக அருகாமையில் கடந்து செல்கிறது என்று தெரிவித்துள்ளது.

இந்த விண்கல் பூமியை மோதாது என்றும், பூமியில் இருந்து  480,000 கிலோமீட்டர் தூரத்தில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில், கடந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

#TamilSchoolmychoice