Home Featured நாடு மலாய் மொழியோடு ஆங்கிலத்தையும் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றது சரவாக்!

மலாய் மொழியோடு ஆங்கிலத்தையும் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றது சரவாக்!

593
0
SHARE
Ad

Adnan Satemகூச்சிங் – மலாய் மொழிக்கு அடுத்ததாக மாநில நிர்வாகத்தில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக் கொண்டது சரவாக்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திம் சையட் இன்று வெளியிட்டார்.

இனி அரசாங்கத்தின் அறிவிப்புகள் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் அனைத்திலும் மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் இருக்கும். அது தான் நடைமுறைக்கு ஏற்றது என்று அட்னான் இன்று காலை அரசாங்க ஊழியர்கள் கூட்டமொன்றில் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

“எந்த ஒரு அரசாங்க ஆவணங்களிலும் மலாய் மொழி மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் ஆங்கிலத்தையும் பயன்படுத்தலாம்” என்று இன்று கூச்சிங் போர்னியோ மாநாட்டு மையத்தில் தெரிவித்தார்.

“சரவாக்கில் ஆங்கிலத்தைப் பயன்படுத்த நான் பரிந்துரைப்பதால், எனக்கு நாட்டுப்பற்று இல்லை என மற்றவர்களால் முத்திரை குத்தப்பட்டு வருகின்றேன். நான் நடைமுறைக்குத் தகுந்தவாறு இருக்கிறேன் அவ்வளவு தான்” என்று அட்னான் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது என்று கூறும் அட்னான், அதற்குச் சான்றாக அறிவியலில் ஆங்கில மொழியின் அவசியத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.