Home Featured நாடு ‘நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையில் கெவினின் கையெழுத்து’ – சகோதரர் சத்தியப் பிரமாணம்!

‘நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையில் கெவினின் கையெழுத்து’ – சகோதரர் சத்தியப் பிரமாணம்!

701
0
SHARE
Ad

Kevin Moraisகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக ‘சரவாக் ரிப்போர்ட்’ – பத்திரிக்கை வெளியிட்ட குற்றப்பத்திரிக்கை நகலில் இருந்த கெவின் மொராயிசின் கையெழுத்தை அடையாளம் கண்டு கொண்ட அவரது சகோதரர், அவ்வழக்கில் கெவின் பணியாற்றியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கெவினின் சகோதரர் இன்று கோலாலம்பூரில் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்தில், கடந்த ஜூலை 30-ம் தேதி நஜிப்புக்கு எதிராக சரவாக் ரிப்போர்ட் இணையதளம் வெளியிட்ட குற்றப்பத்திரிக்கையில் இருந்தது தனது சகோதரரின் கையெழுத்து தான் என்று தெரிவித்துள்ளார்.

“அந்தக் குற்றப்பத்திரிக்கையைப் பார்த்த பின் அதில் செய்யப்பட்டிருந்த திருத்தம் மற்றும் கையெழுத்தைக் கவனித்தேன். அதைத் தீவிரமாக ஆராய்ந்த போது, அதில் இருப்பது எனது சகோதரரின் கையெழுத்து தான் என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். காரணம், அவரது கையெழுத்து எனக்கு மிகவும் பரிச்சயமானது” என்று சார்லஸ் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் இன்று சார்லஸ் இந்த சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ளும் போது, அவரது வழக்கறிஞரான அமெரிக் சித்து உடன் இருந்துள்ளார்.