சிரியா மற்றும் ஈராக்கில் ஆளுமை செலுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், மெல்ல மெல்ல பல்வேறு நாடுகளிலும் தீவிரவாத தாக்குதலை தொடங்கி உள்ளனர். அதற்கு சமீபத்திய உதாரணம் தான் பிரான்ஸ்.
இந்நிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில், 15 முக்கிய இடங்களில் ஐஎஸ் இயக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த பல்வேறு திட்டங்களை வகுத்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.