கோத்தா கினபாலு – நேற்று ஜோலோ தீவுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லா சடலம், அண்மையில் அபு சயாப் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மலேசியர், பெர்னாட் தென் தெட் பென்னின் சடலமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
அச்சடலம் அடையாளம் காணப்படுவதற்காக நேற்று சம்போவாங்கா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தெற்கு பிலிப்பைன்சில் கடத்தலுக்கு எதிராகப் போராடி வரும் போராட்டவாதி பேராசிரியர் ஆக்டாவியோ டினாம்பூ ஸ்டார் இணையதளத்திற்கு அளித்துள்ள தொலைபேசி வழியான தகவலில், அச்சடலத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள மரபணுக்கள், பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் மணிலாவிலுள்ள மலேசியத் தூதரகத்துடன் தற்போது இது குறித்து கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.