Home Featured நாடு 3 இந்தோனேசியர்கள் சபா கடல் பகுதியில் கடத்தப்பட்டனர்

3 இந்தோனேசியர்கள் சபா கடல் பகுதியில் கடத்தப்பட்டனர்

1013
0
SHARE
Ad

Sabah_mapகோத்தா கினபாலு – தென் பிலிப்பைன்சைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பல் ஒன்று, சபா கடல் பகுதியில் மீன் பிடிப் படகிலிருந்து இந்தோனேசியர்கள் மூவரைக் கடத்திச் சென்றுள்ளது.

சனிக்கிழமை 11.40 மணியளவில் இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. கடத்தப்பட்ட மீனவர்கள் ஒரு மலேசிய மீன்பிடிக்கும் நிறுவனத்திற்காகப் பணிபுரிந்தவர்களாவர்.

கடத்தப்பட்டவர்கள் மூவரும் கிழக்கு தீமோர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களைக் கடத்தியவர்கள் தென் பிலிப்பைன்சின் சூலு பகுதியைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

மீன்பிடிப் படகில் ஏழு பேர் இருந்தாலும் மற்ற நால்வருக்கும் முறையான பயணக் கடப்பிதழ்கள்-பத்திரங்கள் இல்லாததால் அவர்களை கடத்தல்காரர்கள் விட்டுவிட்டுச் சென்று விட்டனர்.

சுமார் ஒருமாதத்திற்கு முன்புதான் 4 சரவாக்கியர்கள் கடத்தப்பட்டு, பிணைப் பணம் வழங்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாக இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.