Home Featured உலகம் ஜாகிர் நாயக் உரைகளுக்கு வங்காளதேசம் தடை விதித்தது!

ஜாகிர் நாயக் உரைகளுக்கு வங்காளதேசம் தடை விதித்தது!

546
0
SHARE
Ad

Zakir Naikடாக்கா – அண்மையில் வங்காளதேசத்தில் நடத்தப்பட்ட இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கின் உரைகளால் ஈர்க்கப்பட்டார்கள், அவரைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள் என்ற புலனாய்வு முடிவுகளைத் தொடர்ந்து அவரது உரைகளுக்கும், அவரது உரைகளைத் தாங்கிய அவரது பீஸ் (Peace TV) தொலைக்காட்சி அலைவரிசைக்கும் வங்காளதேசம் தடை விதித்துள்ளது.

நேற்று வங்காளதேசத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் அடங்கிய குழு நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய அரசாங்கமும் ஜாகிர் நாயக் மீதானா விசாரணைகளைத் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றது.

#TamilSchoolmychoice