மாஸ்கோ – உலக அளவில் அதிகார தோரணை மிக்க புகழ்பெற்ற ஆட்சியாளர்கள் குறித்து கட்டுக்கதைகளும், பல்வேறு உண்மைச் சம்பவங்களும் அவ்வபோது வெளியாகிக் கொண்டே இருக்கும். அந்தந்த சமயங்களில் இக்கத்தைகள் பரபரப்பை ஏற்படுத்தவும் தவறியதில்லை. ஹிட்லர் குறித்தும், சதாம் உசேன் குறித்தும் நட்பு ஊடகங்களில் இன்னும் பல்வேறு கதைகள் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் ஊதித் தள்ளும் வகையில், ரஷ்ய அதிபர் புதின் குறித்து ஆதாரங்களுடன் ஒரு பரபரப்பான கதை உலா வருகிறது. அது என்னவென்றால், இதிகாசங்களில் சாகாவரம் பெற்ற மார்கண்டேயன் போல், புதினும் சாகாவரம் பெற்றவராம். இப்படியாக இணையத்தில் கிளம்பி உள்ள இந்த புதுப் புரளியை, உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், கடந்த 1920-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் விளாடிமிர் புதினை பிரதிபலிக்கும் இராணுவ வீரர் ஒருவரின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டில் அவருக்கு வயது 20 என்றும், தற்போது 2015-ம் ஆண்டில் அவருக்கு 115 வயது நிறைவடைந்திருக்கும் என மதிப்பிட்டுள்ளனர்.
இடையில் 1941-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகப் புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் உள்ள புதினுக்கும், 2015-ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் இருக்கும் புதினுக்கும் பெரிய அளவில் தோற்ற வித்தியாசமே தெரியவில்லை.
இதனை ஒருசில வல்லுனர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். மற்றொரு சிலர், ரஷ்ய வட்டாரங்கள் புதினின் ஆளுமையை பரப்புவதற்காகக் கிளப்பிவிட்ட புரளி என்றும் கூறுகின்றனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, குதிரையேற்றம், நீச்சல், உடற்பயிற்சி, நவீன ஆயுதங்களை கையாளுதல், அமெரிக்காவை நடுங்க வைத்தல் என புதின், தனது 63 வயதிலும் சுறுசுறுப்பாகவே வளம் வருகிறார்.