Home Featured வணிகம் அம்பானியுடன் இணைந்து இந்தியாவில் காலூன்றுகிறார் ஸ்பீல்பெர்க்!

அம்பானியுடன் இணைந்து இந்தியாவில் காலூன்றுகிறார் ஸ்பீல்பெர்க்!

812
0
SHARE
Ad

stevan1மும்பை – இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வசதியாக மத்திய அரசு, சமீபத்தில் 15 துறைகளில் அன்னிய முதலீட்டுத் தளர்வுகளை அறிவித்தது. இதனால் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டின. அவற்றில் ஹாலிவுட்டின், பிரம்மாண்ட இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘டிரீம்வொர்க்ஸ்’ (Dream Works) நிறுவனமும் ஒன்று.

இந்தியாவின் தற்போதய முதலீட்டுக் கொள்கைகளை பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஸ்பீல்பெர்க், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானியுடன் இணைந்து ‘அம்பிலின் பார்ட்னர்ஸ்’ (Amblin Partners) என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.

இந்தக் கூட்டணி, இந்தியாவில் திரைப்படங்களை உருவாக்கவும், தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அம்பிலின் பெயரில் பொழுதுபோக்கு சேனல்களும் நிறுவ முயற்சிகள் நடந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

ஸ்பீல்பெர்க் தனது டிரீம்வொர்க்ஸ் நிறுவனத்தை, இந்தியாவில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பே துவங்கி இருந்தார். எனினும், பல்வேறு வர்த்தகக் கொள்கைகள் காரணமாக, அவரால் இந்தியாவில் வலுவாகக் காலூன்ற முடியவில்லை. இந்நிலையில் அவர், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது, அவருக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.