தற்போது ரிலையன்ஸ் கொம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தனது சொத்துகளை விற்கும் தறுவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்பானியைத் தவிர்த்து, சயா விரானி, ரைனா கரணி, மஞ்சாரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காச்சர் ஆகியோரும், நிறுவனப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக ரிலையன்ஸ் கொம்யூனிகேஷன்ஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ரிலையன்ஸ் கொம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 30,142 கோடி ரூபாய் வருவாய் இழந்துள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அனில் அம்பானி கடன் பிரச்சனைகளினாலும், நிதி பிரச்சனைகலிலும் அனில் அம்பானி சிக்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் நிறுவனங்களின் சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தங்களின் கடன்களை திருப்பிச் செலுத்தியதாக அனில் அம்பானி அண்மையில் கூறியிருந்தார்.
அவரது தொலைத் தொடர்பு நிறுவனம் திவால் ஆகும் நிலைமையில் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், செலுத்தப்படாத வங்கிக் கடன்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக 60 வயதான அனில் அம்பானியின் நிறுவனங்களின் வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் தொடர்ந்து கடன்களைத் திரும்பச் செலுத்திவிட்டு குறைந்த கடன்களோடு சிறந்த கட்டமைப்போடு தனது நிறுவனங்கள் செயல்படும் என்றும் அனில் அம்பானி நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.
எனினும், தற்போது அவர் ரிலையன்ஸ் கொம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகி உள்ளார்.