Home வணிகம்/தொழில் நுட்பம் கடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி

கடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி

1132
0
SHARE
Ad

மும்பை – அண்ணன் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உலா வர, தம்பியோ தலைக்கு மேல் கடன் சுமையால் சிக்கித் தவிக்கிறார். இதுதான் இன்றைய அம்பானி சகோதரர்களின் நிலைமை.

தந்தை திருபாய் அம்பானி சொந்தமாக சம்பாதித்த சொத்துகளைக் கொண்ட மிகப் பெரிய வணிக சாம்ராஜ்யத்தை இரு சகோதரர்களும் பங்கு பிரித்துக் கொண்டு ஆளுக்கொரு பாதையில் பயணம் மேற்கொண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணன் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரராக உயர்ந்தார்.

தம்பியும் அவ்வாறே  வணிகத்தில் உச்சநிலையை அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக தவறான முதலீடுகள், வியூகங்களால் தற்போது மிகப் பெரிய கடன்சுமையில் சிக்கித் தவிக்கிறார் தம்பி அனில் அம்பானி.

#TamilSchoolmychoice

சாலைப் போக்குவரத்துக்கான குத்தகைகள் முதல் வானொலி நிலையங்கள் வரை பல்வேறு சொத்துகளை விற்று, ஏறத்தாழ 3.2 பில்லியன் அமெரிக்க டாலரைத் திரட்டி தனது கடன்களை அடைக்கும் முயற்சியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அனில் அம்பானி.

கடந்த 14 மாதங்களில் சொத்துகளை விற்றதன் மூலம் கிடைத்த 350 பில்லியன் ரூபாய்களைக் கொண்டு தனது கடன்களை அடைத்திருப்பதாக அனில் அம்பானி ஜூன் மாதத்தில் அறிவித்தார். எனினும் இன்னும் கணிசமான அளவில் அவருக்குக் கடன் சுமைகள் இருக்கின்றன.

அவரது முக்கிய வணிக வாகனமாகக் கருதப்படும் ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்ஸ் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பங்குச் சந்தைகளில் இடம் பெற்றுள்ள அனில் அம்பானியின் 4 முக்கிய நிறுவனங்கள் மொத்தம் 939 பில்லியன் ரூபாய் கடன்களைக் கொண்டுள்ளன.