Home Featured தொழில் நுட்பம் இனி இந்தியர்கள் டுவிட்டர் மூலம் கட்டணம் செலுத்தலாம்!

இனி இந்தியர்கள் டுவிட்டர் மூலம் கட்டணம் செலுத்தலாம்!

549
0
SHARE
Ad

twitter1புது டெல்லி – இந்தியாவில் டுவிட்டர் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, அந்நிறுவனம் ‘லுக்அப்’ (LookUp) நிறுவனத்துடன் சேர்ந்து புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த வசதியின் மூலம், பயனர்கள் தேவையான கட்டணங்களையும், சில்லறை வர்த்தகங்களையும் மேற்கொள்ள முடியும்.

இது தொடர்பாக டுவிட்டர் வெளியிட்டுள்ள தகவலில், லுக்அப் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, பயனர்கள் நேரடியாக அதன் தளத்திற்கு, டுவிட்டர் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப முடியும்.

#TamilSchoolmychoice

அந்த குறுஞ்செய்தியைப் பெற்றுக் கொண்டு லுக்அப், பயனருக்கு தேவையான சரக்கு மற்றும் சேவைகள் பற்றிய விவரங்களை அளித்தல், நியமனங்களை (Appointments) உருவாக்குதல் மற்றும் உள்ளூர் வர்த்தகத்திற்கான பரிவர்த்தனைகளை ஏற்படுத்துதல் போன்றவற்றினை மேற்கொள்ளும்.

இந்தியாவில், வாட்சாப், பேஸ்புக்கிற்கு இருக்கும் செல்வாக்கு டுவிட்டருக்கு இல்லை. அதனை மனதில் வைத்தே டுவிட்டர் இந்த வசதியினை அறிமுகப்படுத்தி உள்ளது.