Home Featured தொழில் நுட்பம் வாட்சாப்பில் இருந்தும் மறைந்திருக்க வேண்டுமா?

வாட்சாப்பில் இருந்தும் மறைந்திருக்க வேண்டுமா?

823
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வாட்சாப் உபயோகத்தைத் தாண்டி, அதன் தொந்தரவு எப்படி எரிச்சலூட்டும் என்பது நாம் அறிந்த ஒன்று தான். நாம் இணையத் தொடர்பில் இருக்கிறோமா என்பதில் தொடங்கி குறுஞ்செய்தியை படித்து விட்டோமா? என்பது வரை அனைத்தையும் வாட்சாப் அப்பட்டமாகக் காட்டி விடுகிறது.

ஆரம்பத்தில் இதற்கான மேம்பாடுகளை செய்யாமல் இருந்து வந்த வாட்சாப், அதன் பிறகு பயனர்களின் பல்வேறு வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு மேம்பாடுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அத்தகைய மேம்பாடுகளைப் பயன்படுத்தி நமக்கான தனிமையை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

வாட்சாப்பில் உங்களுக்கு குறைந்தபட்சம், சில மணி நேரங்களாவது தனிமை வேண்டுமானால் கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

#TamilSchoolmychoice

ஹைட் யூவர் லாஸ்ட் சீன் (Hide Your Last Seen)    

hide-whatsapp-last-seen-220213‘உங்களது லாஸ்ட் சீன்’ வசதியை மறைத்துக் கொண்டாலே பாதி தனிமை கிடைத்துவிடும். நீங்கள் கடைசியாக எப்போது வாட்சாப் பார்த்தீர்கள் என்பது மறைக்கப்பட்டு விட்டால், உங்கள் தொடர்பாளர் உங்களைத் தொடர்பு கொள்வதில் கண்டிப்பாக சிறிது தயக்கம் காட்டுவார்.

அதனால் உங்கள் தனிமை நேரத்தில் பெரும்பாலும் லாஸ்ட் சீன் வசதியை முடக்கி வைத்திருப்பது நல்லது. அதற்கு Settings > Accounts > Privacy > Last seen > Nobody என்ற வழிமுறையைப் பின்பற்றலாம்.

ஹைட் யூவர் ஸ்டேடஸ்  (Hide Your Status)

statusஉங்கள்  ‘ஸ்டேடஸ்’ (Status)-ஐ பிறரிடம்  இருந்து மறைக்க விரும்பினால்,  Settings > Accounts > Privacy > Status > Nobody என்ற வழிமுறையைப் பின்பற்றலாம்.

ஹைட் யூவர் ஃப்ராபைல் போட்டோ (Hide your profile photo)

profile photoவாட்சாப்பில் இருக்கும் அபாயங்களில் மிக முக்கியமானது அறிமுகமில்லாதவர்களிடத்திலும் நமது புகைப்படம் சென்று சேருவது தான். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தும் இந்த வசதியை நாம் மிக எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். Settings > Accounts > Privacy > Profile Photo என்ற மெனுவில் Everyone அல்லது My Contacts அல்லது Nobody என்ற தேர்வுகளில் விரும்பமானதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

இரட்டை நீலக் குறியீடு

வாட்சாப்பில் உங்களுக்கு வரும் குருஞ்செய்தியை நீங்கள் பார்த்த அடுத்த நொடியில், இரட்டை நீலக் குறியீடு எதிர்முனையில் இருப்பவருக்கு தெரிந்துவிடும். வேண்டியவராக இருந்தால் வேறு வழியில்லை, கண்டிப்பாக பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும். தர்மசங்கடமான சூழலில் இந்த வசதி நம்மை கண்டிப்பாக எரிச்சலூட்டும். இதனை தடுக்க, Account > Privacy > Read Receipts மெனுவின் தேர்வை நீக்கலாம்.

மேற்கூறியவை இல்லாமல், ஒட்டுமொத்தமாக வாட்சாப்பை அடுத்த சில நிமிடங்களுக்கு இடைநிறுத்தும் வசதியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்த வசதி அண்டிரொய்டில் மட்டுமே இருக்கிறது. உங்களது திறன்பேசியில், செட்டிங்க்ஸ் பட்டியை தேர்வு செய்து, அதில் Apps > WhatsApp > Force Stop என்ற வழிமுறையை பின்பற்றினால், வாட்சாப் அடுத்த சில நிமிடங்களுக்கு செயல்படாது.

– சுரேஷ் சிவசங்கரன்