Home Featured இந்தியா காங்கிரசின் தலைமை ஏற்கிறார் ராகுல்!

காங்கிரசின் தலைமை ஏற்கிறார் ராகுல்!

684
0
SHARE
Ad

Rahul Gandhiபுது டெல்லி – ராகுல் காந்தி காங்கிரசின் தலைமை ஏற்க சரியான தருணம் அமைந்துவிட்டதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தற்போது, ஐரோப்பாவிற்கு விடுமுறையில் சென்றுள்ள ராகுல், இந்தியாவிற்குத் திரும்பியதும் கட்சித் தலைவராக பொறுப்பை ஏற்பார் எனத் தெரிய வருகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், “துணைத்தலைவர் ராகுல் ஜனவரி 8-ம் தேதிக்கு முன்னர் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கட்சியின் செயற்குழுக்கூட்டம் கூட்டப்பட்டு, ராகுல் ஒருமனதாகத் தலைவராக அறிவிக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கூடி எடுத்துள்ள இந்த முடிவிற்கு, ராகுல் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அசாம் சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்னர், ராகுல் தலைவராக பொறுப்பேற்பார் என, அக்கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.