குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு ஒலிகள் கேட்டன. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எனக் கருதப்படுபவர்களை நோக்கி இந்தோனேசிய காவல் துறையினர் சுட்டதில் இதுவரை நான்கு தீவிரவாதிகள் மாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் பக்ஸ் எனப்படும் அமெரிக்க காப்பி தொடர் உணவகங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால், தாக்குதலைத் தொடர்ந்து, ஜாகர்த்தாவில் உள்ள அனைத்து ஸ்டார் பக்ஸ் உணவகங்களும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.